Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

ஜிஷா கொலை வழக்கில் புதிய திருப்பம்!



கேரள மாநிலத்தில் கொல்லப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச்சேர்ந்த தலித் சட்டகல்லூரி மாணவி கடந்த ஏப்ரல் மாதம் கொடூரமான முறையில் அவரது வீட்டில் வைத்தே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜிஷாவின் கொலை வழக்கு நிர்பயா கொலை வழக்கு போன்று நாட்டையே உழுக்கி எடுத்தது.

சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் வரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி அமைந்தது. இதனை அடுத்து ஜிஷா கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு படை அமைத்தார் முதலமைச்சர் பிணராயி விஜயன். இதன் பிறகு காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அமீருல் இஸ்லாம் என்ற குஜராத்தைச்சேர்ந்த இளைஞர் சென்னை கல்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டார். ஜிஷாவிற்கும் இவருக்குமிடையே சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் விதத்தில் ஜிஷா கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது காவல்துறையினர் அமீருல் இஸ்லாம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சகோதரர் பதருல் இஸ்லாம் புதிய தகவலை தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதர் அமீரை சிறையில் சென்று சந்தித்திருக்கிறார். அப்போது ஜிஷாவை தான் கொல்லவில்லை என்றும் தன்னுடைய நண்பர் அனார்தான் கொலை செய்தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொலை நடந்தபோது தாங்கள் இருவரும் மது அருந்தியிருந்ததாகவும், மற்றபடி அனார் தான் ஜிஷாவை கொன்றார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அமீரின் சகோதரர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து காவல்துறையினர் தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில் அமீரின் பெயர் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic