ஜம்மு காஷ்மீரில் நடக்கும் வீதிப் போராட்டங்களை ஒடுக்க பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவதற்கு தடை விதிக்க உத்தரவிட முடியாது என்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வாணி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 80-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு மாதங்களுக்குமேலாக அந்தப்பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. கலவரக்காரர்களை ஒடுக்க ராணுவம் பெல்லட் வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது.இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டங்களை ஒடுக்க இவ்வகை குண்டுகளை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி, ஜம்மு காஷ்மீர் பார் கவுன்சில், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமமது மாக்ரே அடங்கிய பெஞ்சு வழங்கியது. இந்த தீர்ப்பில் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவதற்கு தடை விதிக்க உத்தரவிட முடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம், இவ்வகை குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் நிராகரித்தது.
ஆனால் அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை, மாநிலத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ இருந்து ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் கும்பலாக சேர்ந்து கொண்டுமுறையற்ற கலவரத்தில் ஈடுபடுபவர்கள் இருக்கும் வரை, அவர்களை ஒடுக்க கூடுதல் சக்தியை பிரயோகிப்பதைத் தவிர்க்க முடியாது என்றும் தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments