Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

அடையாறு ஆற்றை தூர்வார உண்ணாவிரத போரட்டம் நடத்த திட்டம்!


சென்னை அடையாறு ஆற்றை தூர்வாரவும், ஆற்றுப்பகுதியை அகலப்படுத்தி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணா விரத போராட்டம் நடத்தப்போவதாக  முடிச்சூர் வரதராஜபுரம் பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழையினால் முடிச்சூர் - வரதராஜபுரம் பகுதியில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வருடம் வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னரே அடையாறு ஆற்றை தூர்வாரவும் அதனை ஆழப்படுத்த வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

வரும் ஞாயிற்றுகிழமை பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் வைத்து இப்போராட்டம் நடைபெறும் என அப்பகுதியின் நலமன்ற கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic