Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 8, 2016

மததுவேச கருத்துக்களை வெளியிட்ட முஸ்லிம் பிரச்சாரகர்!

கேரளாவில் மத துவேச கருத்துக்களை வெளியிட்ட சலஃபி முஸ்லிம் பிரச்சாரகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காசர்கோடில் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் சலஃபி (முஸ்லிம்களின் ஒரு பிரிவு) பிரச்சார்கரான சம்சுதீன் பாலத் என்பவர் மத துவேச கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து முஸ்லிம் லீக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் காசர்கோடு காவல் நிலையத்தில் சம்சுதீன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அத்தோடு அவர் பேசிய சில வீடியோக்களையும் கொடுக்கப்பட்டது.

அதில் பேசு சம்சுதீன் இஸ்லாமியர்கள் மற்ற மதத்தினரோடு எந்தவித தொடர்பும் வைக்ககூடாது. இஸ்லாமியர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதும், கிறிஸ்துமஸ் கொண்டாடுவது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும். அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சென்றுவிடவேண்டும் என பேசியுள்ளார். இத்தகைய கருத்துக்களையும் கொள்கைகளையும் தான் ஐ.எஸ் அமைப்பினர் கடைபிடித்து வருகின்றனர்.

இவரின் இந்த பேச்சு சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுப்பதாக உள்ளது, மேலும் அவர் சாதாரண மக்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கிறார் என புகார் கொடுத்த வழக்கறிஞர் தெரிவித்தார். இப்புகார விசாரணைக்கு எடுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோ மேற்கொண்டு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக் உறுதியளித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic