தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்துறையில் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காண விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,தமிழக அரசுத்துறைகளில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்புவதற்கான (Group IV) அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், விண்ணப்பிப்பவர்களுக்கான கடைசி தேதி இன்றுடன் (08.09.2016) நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். தேர்வாணையத்தின் இணையதளம் முடங்கியது போன்ற நிலை ஏற்பட்டு ஐந்து, ஆறு மணி நேரங்கள் போராடியும் விண்ணப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் திரும்பியிருக்கிறார்கள். இன்று(08.09.2016) காலையிலும் அதே நிலைதான் தொடர்கிறது. மேலும், பாதிக்கப்படுபவர்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.
எனவே, ஆன்லைன் விண்ணப்பம் தவிர வேறு வாய்ப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments