வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அரசியல் பின்னனி கொண்டவர்கள்தான், சாதாரண பொதுமக்கள் அல்ல என ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை புகழ் எஃப்.எம் ரேடியோவின் ஆர்.ஜே பாலாஜி தனது ஃபேஸ் புக் பக்கத்தில் காவேர் நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கர்நாடகாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அவர்கள் தான் வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். கடந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது ஓடி வந்து உதவிக்கரம் நீட்டியவர்கள் பெங்களூரு மக்கள். இது தான் மனித நேயம். இன்று போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபடுபவர்கள் உங்களைப்போல என்னப்போல சாதாரண மக்கள் இல்லை.
சாதாரண மக்கள் அனைவரும் அமைதியையும், மனிதெ நேயத்தையும் தான் விரும்புகிறார்கள். கர்நாடகாவில் கே.பி.என் பஸ்ஸை எரித்தவர்கள் பொதுமக்கள் அல்ல, அதே போன்று சென்னை உட்லண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்களும் பொதுமக்கள் அல்ல. அரசியல் கட்சியினர் தான் வன்முறையை தூண்டி இரு மாநிலத்திற்குமிடையே உள்ள உறவை முறிக்க வைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments