Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 13, 2016

​புளோரிடா தாக்குதல் மதம் காரணம் கிடையாது

 
புளோரிடா மாகணத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவன் தொடர்பாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பல்ஸ் என்ற கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என பிரத்யேகமாக நடத்தப்பட்டு வந்த இந்த கேளிக்கை விடுதியில் இரண்டு நேற்றைய தினம் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் உள்ளே புகுந்து சரமாரியாக சுட்டதில் 50ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்றொரு 50ற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது ஒமர் மைதீன் என்ற ஆப்கானிஸ்தான் வம்சாவழியைச்சேர்ந்தவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இவனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடிபெயர்ந்திருக்கிறார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் புகழ்பெற்ற செக்யூறிட்டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஓமர் அங்கிருந்த துப்பாக்கிகளை எடுத்து வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். ஐ.எஸ் தீவிரவாத அமைபின் செய்திகளை வெளியிடும் அமாக் என்ற அரபு செய்தி நிறுவனம் இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்தான் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஓமரின் தந்தை கூறும்போது "ஓமருக்கு ஓரினச்சேர்க்கையாளர்களை பிடிக்காது, ஒரு நாள் அவனது மனைவி மற்றும் குழந்தை முன்பாக இரண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள். இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது கடுமையாக கோபம் கொண்டிருந்தான். அதனாலேயே இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம். மற்றபடி இந்த தாக்குதலுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலும் அவன் எந்த தீவிரவாத அமைப்போடும் தொடர்புடையவன் இல்லை" என்று தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க போலிஸார் ஓமருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic