Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

ஊர் சுற்றும் குருவி: கத்தாரின் கட்டுமானம்!

 

உங்கள் மனதை திருடும் இடங்கள்: கலைநயம் மிகுந்த கட்டடங்களைக் காண விருப்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய நாடு கத்தார். நவீன தொழில்நுட்பத்தில் உருவான வானளாவிய கட்டடங்கள், பழங்கால அரேபிய கலாச்சாரக் கட்டடங்கள் என சுற்றிப் பார்க்க இடங்கள் ஏராளம். தோஹாவில் உள்ள குட்டித் தீவான பியர்ல் கத்தார், உங்கள் மதிமயக்கும் இடமாகும். 980 அடி உயரமுள்ள அஸ்பயர் டவரின் இரவு நேர காட்சி உங்கள் மனதை கொள்ளை கொள்பவை. மேலும் கலிஃபா சர்வதேச டென்னிஸ் விளையாட்டரங்கம் மற்றும் தோஹா கோல்ஃப் கிளப் என பிரம்மாண்ட விளையாட்டு அரங்கங்களை கண்டுகளிக்கலாம். கத்தார் நாட்டின் கலாச்சாரம், மத வழிபாடு மற்றும் நவீனமயமாக்கல் என அனைத்தும் ஒன்றோடொன்று கலந்தவை. இந்த அழகிய நாட்டை சுற்றிப்பார்க்க உங்களுக்கு ஐந்து நாட்கள் தேவைப்படும்.

கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள்: மணல் பரப்பு நிறைந்த பகுதிகளில் வழங்கப்படும் ஒட்டகச் சவாரி, கட்டடக்கலைச் சார்ந்த சுற்றுலாக்கள், கலாச்சார சுற்றுலாக்கள் மற்றும் வியகோ மால் சுற்றிய படகு சவாரி முதலியன.

நமது செலவு மற்றும் பயணம்: மும்பையில் இருந்து புறப்படும் குவைத் ஏர்வேஸ் விமானத்தில் புக்கிங் செய்தால் ரூபாய் 25,500 மட்டுமே.

தங்குமிடம்: தோஹாவில் உள்ள லாவில்லா ஹோட்டலில் ஐந்து நாட்கள் தங்குவதற்கு ரூபாய் 22,600 வசூலிக்கப்படுகிறது.

மீண்டும் பறக்கலாம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic