யுத்தம் காரணமாக சிரிய அகதிகள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைவார்கள். இப்படிச் செல்கிறவர்கள் ஹங்கேரி, செர்பிய எல்லைகளைக் கடந்து தங்கள் உடமைகளுடனும் குழந்தைகளுடனும் தஞ்சமடைய ஓடுகிறார்கள்.
இந்நிலையில் ஹங்கேரி நாட்டுக்குள் நுழைய முயன்ற அகதிகளை ஊடகவியலாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹங்கேரியின் என்ஒன் டிவி என்ற இணையத் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் ஒளிப்பதிவாளர் பெட்ரா லஸ்லோ குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் ஒருவரை தனது காலால் வேண்டுமென்றே இடறி விடுகிறார். இதனால் அந்த தந்தை தன் கையில் உள்ள குழந்தையுடன் நிலை தடுமாறிக் கீழே விழுகிறார். இதுமட்டுமின்றி முண்டியடித்துக்கொண்டு ஓடும் சிறு பெண்ணை இப்பெண் வீடியோகிராஃபர் தனது கால்களால் உதைக்கவும் செய்கிறார்.
இச்செயல்களை ஸ்டீபன் ரிச்டர் என்ற நிருபர் தெளிவாக படம் பிடித்து, அதை ட்விட்டரில் பகிர, அப்போது இது வைரலானதோடு உலகம் முழுக்க சர்ச்சைகளை உருவாக்கியது. பத்திரிகையாளர்களுக்கு இனம், நாடு, மொழி என எந்த குறுகிய உணர்வுகளும் இருக்கக்கூடாது; எந்த ஒரு நிகழ்விலும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே ஊடக அறம் என நினைக்கும் பலரும் பெட்ரா லஸ்லோவைக் கண்டித்தனர். அப்போது, லஸ்லோ ஹங்கேரி தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இப்போது இந்த பெண் ஊடகவியலாளர் மீது ஹங்கேரி அரசு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி எப்படி நூற்றுக்கணக்கான அகதிகள் எல்லைகளைக் கடந்து ஓடி வந்தார்கள் என்றும் பெட்ரா லஸ்லோ அகதிகளை உதைக்க இனவெறி காரணமில்லை என்ற போதிலும், அவர் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அந்த செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அப்பெண் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments