Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

இஸ்லாமியர்களுக்கு வேலை வழங்க மறுப்பு!


ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றை சமீபத்தில் ஜெரிமனியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்டது. இதில் 1500 நபர்களின் வேலைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த‌ பல்கலைக்கழகம், அதில் சந்த்ரா பாவர் என்ற பெயர் கொண்ட நபர்களுக்கு 18.8% வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மரியம் ஓஜ்டர்க் என்ற இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு 13.5% மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மரியம் தனது புகைப்படத்தில் தலையை முக்காடு வைத்து மூடியிருந்தமையால் 4.2% நிறுவனங்கள் மட்டுமே அவரை வேலைக்கான நேர்முகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஜெர்மனியில் தற்போது நிலவும் அரசியல் சமூக சூழலை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டு மட்டும் ஜெர்ம‌னியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். மட்டுமின்றி துருக்கியர்கள் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜெர்மனியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic