இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை 1984ஆம் ஆண்டு நடந்தது. இந்தக் கொலைகளில் அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருந்ததாக அப்போதே குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்த நிலையில் இப்போதைய பாஜக அரசு அது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்துகிறது. சிபிஐ விசாரித்துவரும் இந்த வழக்குக்கு உதவியாக மேலும் சில அதிகாரிகளை சமீபத்தில் நியமித்தது பாஜக அரசு. இந்நிலையில் மத்திய புலனாய்வுத்துறை, கடந்த வெள்ளியன்று, காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லரிடம் விசாரணை நடத்தியது. 1984ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் இவருக்கு இருக்கும் தொடர்பு குறித்து தெரிந்துக் கொள்ளவே இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. டைட்லர் புலனாய்வுத்துறையின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு, சில மணி நேரங்கள் விசாரிக்கப்பட்டார் .
முன்னதாக, டைட்லரை அனைத்து புகார்களில் இருந்தும் விடுவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, கலவரத்தில் கொல்லப்பட்ட பதல்சிங்கின் மனைவி லக்வின்ந்தர் கௌர், இந்த அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தார். கடந்த டிசம்பர் மாதம், டெல்லி நீதிமன்றம் ஒன்று, புலனாய்வுத் துறையின் அறிக்கையை நிராகரித்தது. கலவரத்தில், டைட்லரின் பங்கை மறு விசாரணை செய்யுமாறு கூறியது. குறிப்பிட்ட நவம்பர் 1, 1984 கலவரத்தில், வட டெல்லியில் இருக்கும் குருத்வாரா புல்பங்காஷில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கௌரின் கோரிக்கையின்படி மத்திய புலனாய்வுத்துறை, இவ்வழக்கை மறு விசாரணை செய்து வருகிறது.
No comments:
Write comments