Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

அயோத்திக்கு சென்ற ராகுல் காந்தி!


காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோயிலுக்கு முதன் முறையாக சென்று வழிபாடு நடத்தினார். 1992 மசூதி இடிக்கப்பட்ட பிறகு நேரு குடும்பத்தைச்சேர்ந்த ஒரு அயோத்திக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

உத்திரபிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி 'மகா யாத்திரை' நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 2500 கி.மீ பயணம் செய்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அயோத்தியிலுள்ள ஹனுமன் கர்ஹி கோவிலுக்குச் சென்று வழிபாடு நட்த்தினார். முன்னதாக விசுவ இந்து பரிஷத் அமைபிற்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் மகான் ஜியான் தாஸை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

கடந்த 24 வருடங்களாக நேரு குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர் கூட இதுவரை அயோத்திக்கு சென்றதில்லை. முதன் முறையாக ராகுல் காந்தி சென்றிருக்கிறார். அவரை வரவேற்க ஏகப்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். ராம ஜன்ம பூமி - பாபர் மசூதி இருந்த இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இருக்கும் ஹனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic