குஜராத் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்த போது அவர மருத்துவரும், துப்புறவுத்தொழிலாளியும் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தன்னை இருவர் கற்பழித்துவிட்டதாக ப தெரிவித்திருந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரான செளகான் மற்றும் வான்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஐ.சி.யு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்திப்பதற்கு இரவு நேரங்களில் அவரது உறவினர்கள் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனை சாக்காக வைத்துக்கொண்டு அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவரும், துப்புறவுத்தொழிலாளியும் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Write comments