அமெரிக்காவின் கோபம் மூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்த தயார் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
நேற்று வெனிசுலாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரியோங் ஹோ மேற்கூறிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இரண்டு குண்டு வீச்சு விமானங்களை தென்கொரியா பகுதியில் அமெரிக்கா பறக்கவிட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பியோங்யாங்கின் அணு ஆயுத சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் அந்தக் குண்டு வீச்சு விமானங்கள் பறக்கவிடப்பட்டன.
மேலும் வாஷிங்டனின் மிரட்டலைச் சமாளிக்க அணு ஆயுதச் சோதனைகள் தேவை என்று அமைச்சர் ரியோங் ஹோ கூறியுள்ளார். கொரியா தீபகற்பத்தில் அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முறையான தற்காப்புக் கொள்கையின் ஒரு பகுதியே அணு ஆயுத சோதனைகள் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நடைபெற்று வரும் இந்த மோதல் போக்கினால் மூன்றாம் உலகப்போர் துவங்கும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Write comments