Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

ஹஜ் யாத்திரிகளுக்கு உதவிய தன்னார்வ தொண்டூழியர்கள்...!



ஹஜ் யாத்திரையின் போது நூற்றுக்கணக்கான இந்தியர்கள் யாத்திரிகைகளுக்கான சேவை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இவ்வருடம் சுமார் 18 லட்சம் யாத்திரிகள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப்போக்க சவுதி அரேபியாவில் பணி புரியும் இந்தியாவைச்சேர்ந்தவர்கள் தன்னார்வ ஊழியர்களாக பணியாற்றியுள்ளனர். ஐ.எஃப்.எஃப் என்று அழைக்கபடும் அந்த அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது.

வயதான யாத்திரிகளை இரயிலில் ஏற்றிவிடுவதும், பல இடங்களுக்குச் செல்ல வழிகாட்டுவது, வயதானவர்களை சக்கர நாற்காலியில் அழைத்துச்செல்வதும், நோயுற்றவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்பது, கூட்டத்தில் தொலைந்து போனவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபட்டார்கள்.

மினா என்னும் பகுதியில் அதிக குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பெரும்பாலான யாத்திர்கள் குடில் மாறி வழி தவறி சென்றுவிட்டு உரிய இடத்திற்கு செல்ல முடியாமல் தத்தளிப்பது வழக்கம். இம்முறை இச்சிரமத்தை போக்க மினா டென்ட் லொகேட்டர் என்னும் ஆன்டிராய்டு சாஃப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவ்வமைப்பின் நிர்வாகி சம்சுதீன் தெரிவித்துள்ளார். இந்த சாஃப்ட்வேர் மூலம் இந்தியர்கள் மட்டுமல்ல அனைவரும் பயனடைந்ததாக அவர் தெரிவித்தார்.

தகவல்: தூது ஆன்லைன்


 
 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic