Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 17, 2016

பெங்களூர் வன்முறையில் ஆர்.எஸ்.எஸ்க்கு தொடர்பா...?




காவேரி விவகாரம் தொடர்பாக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் நடந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருப்பவர் பரமேஷ்வர். தன்னிடம் சில காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த கோணத்தில் விசாரிக்க கோரியதாகவும், எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றும், பரமேஷ்வர் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். 12ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் தமிழக வாகனங்கள் குறி வைத்து எரிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே 16 காவல் நிலைய சரகங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெங்களூர் நகரில் வரும் 25ம் தேதிவரை, 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவு இரு தினங்கள் முன்பு தளர்த்தப்பட்டது. இந்த கலவரம் பெங்களூர் நகருக்கு உலக அளவில் கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிட்டது

இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய பரமேஷ்வர், காங்கிரஸ் அரசாங்கத்தை கலைக்கும் நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் துணை சங்பரிவார் அமைப்புகள் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம் என ஆலோசனை கூட்டத்தில் சிலர் தெரிவித்தனர். எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

காவேர் கலவரத்தை, சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாக போலீசாருக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நிறுவ உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவங்கள் அரங்கேறின. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களை கன்னட பத்திரிகையொன்று சிசிடிவி ஆதாரங்களோடு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்கள் திறமையின்மையை மறைப்பதற்காக, சில அரசியல் தலைவர்கள் பிறர் மீது பழிபோடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சரும் அதே பாதையை தேர்ந்தெடுத்திருப்பது கொடுமையானது. உயர்ந்த பதவிகளில் இருப்போரிடமிருந்து திறமையான நடவடிக்கைகளைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்களை கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic