இந்தியாவின் அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் அடிபணியாது, சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடும் கஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நிஸார் அலி கான் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரின் பிரதமர் ராஜா முகமது ஃபரூக் ஹைதர் கான், நிஸார் அலி கானை, இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். கஷ்மீர் நிலவரம், மனித உரிமை மீறல் புகார்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பிரதமரிடம் நிஸார் அலி கான் கூறியதாவது, இந்தியாவின்மி மிரட்டல்களுக்கு பாகிஸ்தான் ஒருபோதும் அடிபணியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடரும். காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஆகியவை ஐ.நா.வுக்கு மட்டுமன்றி ஜனநாயகப் பண்புகளைப் பின்பற்றும் மற்ற நாடுகளுக்கும் சவாலாக உள்ளன.
பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் இந்திய அரசின் மனோபாவமும், பாகிஸ்தானுடனான ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை இந்திய அரசு புறக்கணித்து வருவதும், இந்தப் பகுதியில்அ மைதியை ஏற்படுத்துவதற்கு முக்கியத் தடைகளாக உள்ளன என்று நிஸார் அலிகான் கூறினார்.
No comments:
Write comments