Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 8, 2016

இலங்கை தூதுவர் மீது தாக்குதல் - நாம் தமிழர் கட்சியினரே காரணம்!


மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்ஸாரினை, சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சியின் மலேசியப் பிரிவினரே தாக்கியுள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த‌ தாக்குதல் சம்பவத்துக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாவது, “மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரை இந்தியாவின் தமிழகத்தில் இயங்கி வரும் ‘நாம் தமிழர்’ கட்சியின் மலேசியக் கிளையினரே தாக்கியுள்ளனர். இதில் இலங்கையில் இருப்பவர்களோ, இலங்கையில் முன்னர் இருந்தவர்களோ, இலங்கையில் பெற்றோர்களை கொண்டவர்களோ ஈடுபடவில்லை.

போர்க்குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்காக தீர்மானமொன்றை மலேசியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கத்துவத்தை பெற்றுப் பரிந்துபேச வேண்டும் என்றும் அக் கட்சி தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்புடையது. இது தொடர்பாக‌ இலங்கை அரசாங்கம் தனது கடமையையும் சரியாக செய்யும் என தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic