நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் சாத்தியம் இருந்தாலும் சரி இருக்காவிட்டாலும் சரி மதுவிலக்கை விரும்பக்கூடியவர்களாக்வே இருக்கின்றனர். எனினும் கோத்ரேஜ் கம்பெனி ஓனருக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லையாம்.நான் மதுவிலக்கிற்கு எதிரானவன் என கோத்ரேஜ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதி கோத்ரேஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய தொழிற் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் ஆதி கோத்ரேஜ் மதுவிலக்கைப்பற்றி மேலும் கூறும்போது "சமூக பிரச்சனைகளில் நான் வல்லுனர் இல்லை. ஆனால் அது வேலைக்கு ஆகாது. அமெரிக்காவில் மதுவிலக்கை அமுல்படுத்த முயன்ற போது அங்கு மாஃபியா கும்பலின் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மதுவிலக்கு திட்டம் தோல்வியில்தான் முடிந்தது.
அதே பொல இந்தியாவில் இது வேலைக்கு ஆகாது. தடை செய்ய முயற்சிப்பது பலனற்ற முயற்சி மட்டும் தான். இதை நாம் ஆதரிக்கக் கூடாது என்றார். கோத்ரேஜ் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி சாதனங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுவிலக்கை அமுல்படுத்திவிட்டால் இவர்களது கல்லா கட்டுவதில் பிரச்சனை வந்துவிடும் என்பதற்காகவே சொல்கிறாரோ என்னவோ...? அது சரி உமக்கு உம் பிரச்சனை.
No comments:
Write comments