இங்கிலாந்தில் வசித்து வரும் 24 வயது சீக்கிய பெண் தனது முகத்தில் 6 இன்சிற்கு தாடி வளர்த்து, தாடி வளர்த்த இளம்பெண் என்ற பெருமையை பெற்றதோடு கிண்ணஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியான பெர்க்சிரேவில் வசித்து வருபவர் ஹர்னம் கெளர். இவர் பருவ வயதை அடைந்ததும் ஆண்களுக்கு போலவே தாடி வளரத்துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் இதனால் கவலை அடைந்த ஹர்னம் பின்னர் இதனையே ஒரு சாதனையாக கருத துவங்கினார். 2016ஆம் ஆண்டு அவருக்கு இச்சாதனையே ஒரு இன்ப அதிர்ச்சியாக மாறிவிட்டது.
காரணம் அவரது பெயர் கிண்ணஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டது. தற்போது தனக்கு தாடி வளர்ந்திருப்பதை பெருமையாகவே கருதுகிறார் ஹர்னம் கெளர்.

No comments:
Write comments