Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

பாக் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்! - சுப்பிரமணிய சாமி

ban importing pak cements

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் உள்நாட்டு சிமென்ட் தொழில் துறையின் வளர்ச்சி, அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மட்டும் தொடர்புப்படுத்தி பார்க்காமல், தற்போதைய நிலையில் தேசத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிமென்ட் தேவையைக் கருத்தில் கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டு சுங்கவரி இல்லாமல் பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யத் தொடங்கினோம். தற்போது வரை இறக்குமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இன்றைய சூழலில் உள்நாட்டிலேயே தேவைக்கு அதிகமாக சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.

உள்நாட்டில் பயன்படுத்தப்படாமல் 11.6 கோடி டன் சிமென்ட் வீணாகிறது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமென்ட் மூட்டைகளில் ஹெராயின், கள்ளநோட்டுகள் ஆகியவை மறைத்துவைத்து எடுத்துவரப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே தற்போது நிலவிவரும் பதற்றமான சூழலில் வெடிபொருள்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் சிமென்ட் மூட்டைகளில் மறைத்து வைத்துக் கடத்தி கொண்டுவரப்படலாம். எனவே, தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic