Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

மதுவினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் வருடந்தோரும் அநாதை ஆகின்றனர்!

thousands of children becoming orphan due to liquor

தமிழகத்தில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தினால் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவகர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மது போதைக்கு எதிரான தேசிய பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 2ஆம் தேதி சமூக சேவகர் மேதா பட்கர் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் மதுவுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொண்ட அவர், புதன்கிழமை காலை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மதுபானங்கள், போதை பொருள்களுக்கு எதிராக தேசிய அளவில் எனது பயணத்தை தொடங்கியுள்ளேன். இந்த பயணத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராஜ் ஆட்சியின் போதும் அவருக்குப் பின் தொடர்ந்த ஆட்சிகளிலும் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த 1969-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மதுவிற்பனை கொண்டு வரப்பட்டது. தற்போது அரசே மதுவிற்பனையை செய்து வருகிறது. இந்த மதுப்பழக்கத்தால் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமையாகி மரணமடைந்து வருகின்றனர். அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் வருவாய் வருகிறது என்பதற்காக மது விற்பனையை நியாயப்படுத்த முடியாது. மது குடிப்பவர்களின் வீடுகளில் குடும்ப அமைதி கெட்டு கணவன், மனைவி இறந்து அவர்கள் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விடும் சூழ்நிலையும் உள்ளது. எனவே மக்கள் நலனைக் கவனத்தில் கொண்டு பீகார் மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது போல் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார் மேதா பட்கர்.

இதைத் தொடர்ந்து, பட்டினபாக்கம் பகுதியில் குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேதா பட்கர் கூறியதாவது, குடிசைவாழ் மக்களை வேறு இடத்துக்கு மறுகுடியமர்த்தக் கூடாது. அவ்வாறு குடியமர்த்துவதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, அலைகழிப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் பாதிப்புள்ளாக நேரிடுகிறது. இதனால், அதே இடத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும். இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் முன்னரே வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், தற்போது அவர்கள் மறுகுடியமர்த்தப்படுகின்றனர். எனவே, குடிசைவாழ் மக்களுக்கு வசதி வாய்ப்புகள், கல்வி உள்ளிட்டவை அனைத்தும் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து குடிசைவாழ் மக்கள் குறித்த அறிக்கையை நீதிபதி ஹரிபரந்தாமன், எழுத்தாளர் ஞானி உள்ளிட்டோர் முன்னிலையில் வழங்கினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic