இரயில் கொள்ளை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் இரயிலில், இரயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று நேற்று மாலை தகவல் பரவியது. ‘வாட்ஸ்-அப்’பிலும் தகவல் பரவத்துவங்கியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு,
இரயில் கொள்ளை வழக்கில், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments