‘தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம்’ என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments