டெல்லியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கக்கூடாது என்று வலியுறுத்தி, ‘பீட்டா’ அமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காற்றடைத்த 2 பெரிய காளை பொம்மைகளுக்குள் இருவர் நுழைந்து நடந்து வந்தனர்.
இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ராஜாராமன், ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பீட்டா அமைப்பினர் மீது புகார் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பீட்டா அமைப்பினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், தடையை மீறி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்பவர்களை அரசு கைது செய்யலாம் என்ற நிலை இருக்கும் போது, இப்படி ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments