"ஏழைகள் தங்களது அறிவாற்றலை பெருக்கி, அதன் மூலம் பொருளாதார வசதியை உயர்த்திக் கொள்வதற்கு நூலகங்களே சிறந்த வாய்ப்பாகும். அந்த வகையில், வறுமையைஒழிப்பதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன' என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார்.
அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் 3 நாள் நூலகக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு இடையே இணைப்புப் பாலமாக இருக்கும் "டெல்நெட்' அமைப்பும், தில்லி, தேஸ்பூர் பல்கலைக்கழகங்களும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கை தொடக்கி வைத்து, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பேசியதாவது,
நூலகங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏழைகள் தங்களது அறிவாற்றலைப் பெருக்கி, அதன் மூலம் பொருளாதார வசதியை உயர்த்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஏழை-பணக்காரர் இடைவெளி குறையும். நாட்டிலுள்ள நூலகங்களை நவீனமயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில், "டெல்நெட்' அமைப்பின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார் அன்சாரி.

No comments:
Write comments