கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோகுச்சிப்பாளையம் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாக குவியல் குவியலாக கிடந்துள்ளன.அங்கு கிடந்த பணம், வீசிய காற்றினால் அங்குமிங்காக பறந்து சென்றது. இவற்றை பார்த்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர். மேலும் ரூபாய் நோட்டுகள் கிடப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பணம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணம் சேலத்திலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்ற கோணத்திலும் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் சென்ற ரயிலில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments