யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல்-ஆஸ்திரியா இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த அணி தடுமாறியது. அதன் உச்சக்கட்டமாக 79-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரொனால்டோ வீணடித்தார். அவர் அடித்த பந்து, கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதன்பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ரொனால்டோ 85-ஆவது நிமிடத்தில் கோலடித்தார். ஆனால் அதை நடுவர் "ஆப் சைடு' என அறிவிக்க, ரொனால்டோ விரக்தியடைந்தார். இறுதியில் இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா செய்திருந்த போர்ச்சுகல், இப்போது 2-ஆவது ஆட்டத்திலும் டிரா செய்துள்ளது. இதனால் ஹங்கேரிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் போர்ச்சுகல் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஹங்கேரி-ஐஸ்லாந்து இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments