மோடியின் அதிரடி அறிவிப்பால் புழக்கத்திலிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லா காசாகிபோயின.
பணத்தை இருப்பு வைத்துள்ள மக்கள் டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசால் காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தினக்கூலி வாங்குவோர் பாடுதான் படு திண்டாட்டமாக போய்விட்டது. 500, 1000 ரூபாய் என கூலி வாங்கி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வோர் கடுமையாக திணறி வருகின்றனர். அதிலும் ஏழை எளிய மக்களின் பாடு மிக மோசமாகிவிட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சரியான திட்டமிடல் இல்லாமல் மோடி அரசு செயல்படுவதாகவும், கருப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
ஆனால், 99% மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் தான் வைத்திருப்பார்கள். பெரும்பாலானோர் சேமித்து வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை நாளை மறுநாள் வங்கிகளில் மாற்ற வருவர்.
அதிலும் குறிப்பாக கடுமையாக உழைத்து சம்பாதித்த ஏழை எளிய மக்கள் தான் அதிகம் வருவார்கள். அவர்களை வங்கிகள் துன்புறுத்தக்கூடாது இதற்கு ஆளும் பா.ஜ.க.அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசு கையாண்ட விதம் மிகத்தவறானது என்றும், வங்கிகளுக்கு வரும் பொதுமக்களை துன்புறுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments