Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 9, 2016

மக்களே உஷார்! 5 நாட்கள் பேங்க் விடுமுறை - இடையில் ஒரு நாள் தான் வேலை செய்யும்...!


இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது மட்டுமின்றி இன்று மற்றும் நாளையும் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்கள் இயங்காது என அறிவித்ததால், நேற்றிரவு ஏ.டி.எம் சென்டர்களில், மக்களின் கூட்டம் அலை மோதியது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இன்று ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இது தற்காலிகமானது தான் என்றும் நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தான் நாம் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அதாவது இன்றும் நாளையும் ஏ.டி.எம்.கள் வங்கிகள் இயங்காது. 11 முதல் பணம் டெபாசிட் செய்யலாம் என அறிவித்ததில் ஒரு சிக்கல் உள்ளது. இதில் இடையில் நவம்பர் 11-ம் தேதி மட்டுமே வங்கிகள் இயங்கும். இதற்கு அடுத்த நவம் 12, 13, 14ம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

BANK CLOSED:

November 9 ,10 - Bank Closed

November 11 - Working

November 12 - 2nd Saturday

November 13 - Sunday

November 14 - Guru Nanak Jayanthi



11ம் தேதி மட்டுமே வங்கிகள் இயங்கும் என்பதால் பணம் எடுக்க வேண்டியவர்கள் அனைவரும் வங்கிகளில் திரளாக ஒன்று கூடுவார்கள்.

அனைவரும் ஒன்று திரண்டால் வங்கிகள் ஸ்தம்பித்து போய்விடும் அபாயம் உள்ளது.

5 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு, 2 நாட்கள் மட்டும் தான் வங்கி விடுமறை அதன்பின்னர் பணம் எடுத்து கொள்ளலாம் என கூறியிருக்கும் மோடியின் பிளான் பலே…!!

இதுலயிருந்து என்ன தெரியுதுன்னா பிளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது…!! ஓகே..!!

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic