கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்கி இந்திய அணி மிகப்பெரிய தவறு செய்யவுள்ளது என முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடந்த 2011ல் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடந்த போது, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தவர் முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் கேரி கிறிஸ்டன்.
கேரி கிறிஸ்டன் - தோனி கூட்டணியில் தான் இந்திய அணி, தனது 28 ஆண்டு கனவை நினைவாக்கியது. இதன்பின் கிறிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இருப்பினும் ஐ.பி.எல்., போட்டிகளில் ஆலோசகர் பொறுப்புகளில் செயல்பட்டுவந்தார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள், டி-20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரது பேட்டிங் திறமை குறித்தும், கேப்டன் பொறுப்பு குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன் விளைவாக அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் தோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ்டன் கூறியது:
விராட் கோலிக்கு வழிவிட வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் நிச்சயம் பதில் கிடையாது. அதே நேரத்தில் கேப்டன் தோனியை பொறுப்பில் இருந்து நீக்கினால், அதற்கான விளைவுகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும். அதை சந்திக்க தயார் என்றால், இந்த முயற்சியை செய்யலாம். ஆனால் உலகக்கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில் இது சரியான சோதனையாக இருக்காது. என எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரிந்தது தான். என்னுடன் பணியாற்றிய வீரர்களிலேயே தோனி தான் சிறந்தவர் என அவர் கூறினார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments