Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

புரட்சி தலைவரின் நூற்றாண்டுவிழா கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு!

MGRமுன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த அவர், அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தார். திமுகவில் முன்னணித் தலைவராக இருந்த எம்ஜிஆர், 1972-ல் அதிமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 1977-ல் தமிழக முதல்வரானார். தொடர்ந்து 3 முறை அப்பதவியில் இருந்தார். 1987-ல் மறையும் வரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற பெருமையை பெற்றுள்ள அதிமுக, தற்போதும் ஆளுங்கட்சியாக உள்ளது.

அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. அதிமுகவினரும், எம்ஜிஆர் ரசிகர்களும் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய கி.வீர மணி, ‘‘திராவிடர் கழகம் என்ற பாசறையில் இருந்து உருவான எம்ஜிஆர், சமூக நீதிக் கொள்கைகளைச் செயல்படுத்தியவர். பகுத்தறிவாளர். ஆனால் அவரை இந்து, இந்துத்துவ கொள்கையை ஆதரித்தவர் எனக் கூறி அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. திருவள்ளுவர், ராஜேந்திர சோழனைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் முயன்றது. அதில் தோல்வி கிடைக்கவே இப்போது எம்ஜிஆர் மூலம் காலூன்ற திட்டமிடுகிறார்கள். இந்த சதியை முறியடிக்கவே நாங்கள் முந்திக்கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைத் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.

கி.வீரமணியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆர்எஸ்எஸ் மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன் கூறியதாவது,

திமுகவில் இருந்தவர் என்பதால் எம்ஜிஆரை இந்து மதத்துக்கு எதிரானவராக சித்தரிக்க கி.வீரமணி முயற்சிக்கிறார். சிறுவயது முதல் மறையும் வரை எம்ஜிஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், இந்து மதத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இதைப் பல முறை அவரே வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வார இதழில் எழுதிய தொடரில் மதமாற்றத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

திருச்சியில் கவிஞர் கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய எம்ஜிஆர், இந்துக்களின் பெருந்தன்மை குறித்து விரிவாக பேசியதை யாரும் மறக்க முடியாது. தமிழகத்தில் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு கரம் நீ்ட்டியவர். எனவே, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மற்ற இந்து அமைப்புகளுடனும், பாஜக நிர்வாகிகளுடனும் ஆலோசித்து வருகிறோம் என அவர் கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic