அமெரிக்காவில் தேர்தலுக்கு முந்தைய நாள் அல்கொய்தா தீவிரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் வரும் 8ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் பரபரப்பாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாளான அதாவது வரும் திங்கள்கிழமை அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நியூயார்க், டெக்சாஸ், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள அதிகாரிகளையும், தீவிரவாத ஒழிப்பு கூட்டுப் படைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் எச்சரித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அமரிக்காவில் நடைபெறும் தாக்குதல்களுக்கு எதிராக, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் என FBI அறிக்கையை வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

No comments:
Write comments