காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்றூ சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் இராணுவ வீரர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரம் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கார்த்தி சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நக்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ், 'மத்தியில் உள்ள பாஜக அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது. காங்கிரஸ் இயக்கம் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. ராகுல் காந்தி விரைவில் பிரதமராவார்'' என்று கூறினார்.

No comments:
Write comments