Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

கேரள அரசிற்கு பா.ஜ.க செயலாளர் ஹெச் ராஜா கடும் கண்டனம்!

H Raja
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான நிலைபாட்டில் கேரள அரசு தற்போது பெண்களை அனுமதிக்கலாம் என தீர்மானித்துள்ளது. இதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 5 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க அரசுக்கு சம்மதம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது ஹிந்துக்களைச் சீண்டுகின்ற, ஹிந்துக்களுடைய மத நம்பிக்கையில் வேண்டுமென்றே குறுக்கிடுகின்ற தவறான, தீய முயற்சியாகும்.

ஏனென்று சொன்னால் எந்தவொரு சமுதாயம் அல்லது குழுக்களுடைய நடைமுறை, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் ஆகியவை பாதுகாப்படும் என 66 ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட நம் அரசியல் சாசனத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

அதன் படி ஒரு கோவிலில் தொடர்ந்து பாரம்பரியமாக இருக்கின்ற ஒரு நடைமுறையை மீறுவதற்கு எவரும் சட்ட ரீதியான எந்த வித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது.

கேரளாவில் பெண்கள் மட்டுமே வழிபடும் பகவதி கோவில்களும் உண்டு. அது ஆண்களுக்கு எதிரான பழக்கம் எனக் கூறுவதா?

சில காரணங்களால் பெண்களில் குறிப்பிட்ட வயதினர் வருவதை இந்த ஒரே ஒரு கோவிலில் மட்டும் சம்பிரதாயமாகத் தவிர்க்கின்றனர். எனது மகள் கூட சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்திருக்கிறாள். இன்றும் கூட எத்தனையோ தாய்மார்கள் சபரிமலை சென்று வருகிறார்கள். எனவே சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்றும், கோவில் விதிமுறைகள் பெண்களுக்கு எதிரானது என்றும் கூறுவதே மொத்தத்தில் தவறு.

ஆனால் அப்படிச் சொல்லி நமக்கெதிராக இந்த வழக்கைத் தொடர்ந்தது யாரென்று தெரியுமா? ஒரு கம்யூனிஸ முஸ்லீம் வழக்கறிஞர்.

நாம் கேட்க விரும்புவது. உச்ச நீதிமன்றமாக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். நம் நாட்டில் இன்று வரை எந்த மசூதியிலும் பெண்கள் தொழுகை நடத்த முடியாது. இது குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கு நடத்தப் போகிறதா? முஸ்லீம்கள் தான் அப்படி ஒரு வழக்கை வரவேற்கப் போகிறார்களா?

ரோமாபுரியில் வாட்டிகன் நகரில் ஆட்சி புரியும் கிறுஸ்தவ மத குரு “போப்” பெண்கள் ஒரு போதும் பாதிரிகளாக (பிஷப்) ஆக முடியாது என சமீபத்தில் கூட கூறி இருக்கிறார். அது குறித்தெல்லாம் இந்த கம்யூனிஸ, காங்கிரஸ் ஜிஹாதிய சக்திகள் என்ன சொல்லப் போகின்றனர்?

ஆனால் இதே காங்கிரஸ், கம்யூனிஸ, ஹிந்து விரோத சக்திகள் ஹிந்துக்களின் விவகாரங்களில் தலையிடுவதும், ஆனால் பொது சிவில் சட்டம் என்று வருகிற பொழுது ஜிஹாதிய சக்திகளின் காலில் விழுந்து விடுவதும் என ஜிஹாதிகளின் கைப்பாவையாக மாறியிருக்கும் அவர்களின் கேவலமான நிலையை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

அது ஒரு புறமிருக்க, ஒரு கோவிலில் தொடர்ந்து பாரம்பரியமாக இருக்கும் ஒரு நடைமுறையை மாற்ற நினைப்பது இந்நாட்டில் 85% இருக்கின்ற ஹிந்துக்களின் உரிமையைப் பறிக்க நினைக்கும் பாதகச் செயலாகும்.

அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைப் படியே இவ்விஷயத்தில் தீர்ப்பு சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.

ஆனாலும் கூட நம்முடைய மத சம்பந்தமான நடவடிக்கைகளில் இவர்கள் இம்மாதிரி எல்லாம் குறுக்கிடுவதைத் தடுக்க தன்மானமுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

இம்மாதம் 9-ஆம் தேதி (நாளை) கேரள மாநில பாஜகவின் மையக் குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து நாங்கள் விவாதித்து,தீர்மானம் இயற்ற இருக்கிறோம்.

அந்தத் தீர்மானத்தைக் குறித்து விளக்கிச் சொல்வதற்காக 11, 12 தேதிகளில் மத்திய சட்ட அமைச்சர் திரு ரவி ஷங்கர் பிரசாத் அவர்களை தில்லியில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic