Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

சென்னையில் தொடரும் குற்றங்கள் கவலையளிக்கிறது - தமிழிசை

சென்னையில் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சுவுந்தரராஜ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

சென்னையில் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. வழியில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்வது இன்று தொடர்கதையாகி வருகிறது. நேற்று கூட பாதுகாப்பானது என்று நடுத்தர பெண்கள் பயணம் செய்யும் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சென்னையில் முதியவர்கள் தனியாக பாதுகாப்பாக வாழ முடியவில்லை. அத்தகைய முதியவர்களை குறிவைத்து கொலை செய்வதும், தாக்குவதும் அதிகரித்து வருகிறது. ரோட்டில், வீட்டில் எங்குமே பாதுகாப்பற்ற நிலை.

ஏற்கனவே நடந்த குற்றங்களில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையே தொடர்கிறது. அப்படியென்றால் இவையெல்லாம் திட்டமிட்டு குற்ற செயல்களுக்கான ஓர் கூட்டமே கூட்டாக  ஒருமித்த திட்டமிடலில் கைதேர்ந்த திட்டங்களுடன் நடத்தி முடித்து, அதிலிருந்து தப்பித்தும் விடுவதற்கான நுணுக்கமாக செயல் திட்டங்கள் ஒன்றை வலைபின்னலில்ன் அடிப்படையில் கூட்டாக திட்டமிடப்படுகிறதா? திட்டமிட்டு செயலாற்றப்படுகிறதா என்பதை காவல்துறை கவனமாக கண்காணிக்க வேண்டும். குற்றங்களை பார்க்கும் போது பல குற்றங்கள் தனியாக குற்றங்கள் போல் தெரியாமல் ஒரு மிகப்பெரிய திட்டங்களின் கிளைக்குற்றங்கள் போலவே தெரிகிறது. அதே போல் குழந்தை கடத்தலிலும், போதைப்பொருட்கள் தாரளமாக கிடைபதிலும் இத்தகைய சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் புழல் சிறையில் பிடிப்பட்டிருக்கும் செல்போன்கள், சிம்கார்டுகள் சந்தேகத்திற்கு வலு சேர்கிறது. பல கட்டுபாடுகள் நிறைந்த சிறையில் தொடர்ந்து எப்படி செல்போன்கள், சிம்கார்டுகள் போன்றவை எடுத்துச்செல்லப்படுகிறது என்பது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. சிறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. எனவே காவல்துறை தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது என்பது, முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் அவை உடனே தடுக்கபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic