கடந்த மே மாதம் கேரள மாநில முதல்வராகப் பதவியேற்றார் பினராயி விஜயன். ஐந்து மாதங்கள் ஆட்சிக்கு பிறகு நீர் பராமரிப்பு, கழிவு மேலாண்மை, இயற்கை விவசாயம், அனைவருக்கும் வீடு, மேம்பட்ட மருத்துவம், பள்ளிகளில் அதிக வசதிகள் என்று பல திட்டங்களை அறிவிக்க இருக்கிறது இந்த வெற்றிக் கூட்டணி. பினராயி விஜயன், ‘எகனாமிக் டைம்ஸு’க்கு அளித்த பேட்டியின் போது, ‘மாதத்தின் இறுதியில் ரூ.4,000 கோடி மதிப்புள்ள புராஜெக்டுகள் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார். பேட்டியின் சில பகுதிகள்:
கேள்வி: வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கிறது? மத்திய அரசின் ஆதரவு குறித்து மகிழ்கிறீர்களா?
அரசியல்ரீதியாக நாங்கள் துருவங்களில் இருந்தாலுமே, வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. உதாரணமாக, சாலை வளர்ச்சிக்கு வளங்களில் குறைபாடு ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலத்தில் நில கையகப்படுத்துதலுக்கு அதிக செலவாகும் என்பதை கருத்தில்கொண்டு, நிதின் கட்காரி எங்களுக்கு உறுதியளித்திருக்கிறார். எங்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமரும் ஆதரவு அளிக்கிறார். கடந்த சில வாரங்களாக அரசு சில சர்ச்சைகளைச் சந்தித்திருக்கிறது.
கேள்வி: அரசின் உருவத்தை இந்த சர்ச்சைகள் மங்கச் செய்ததாக நினைக்கிறீர்களா?
ஒரு கட்சி பதவியில் இருக்கும்போது, அது சில சர்ச்சைகளை சந்திக்கும். எப்போதுமே எளிதான பயணமாக இருக்காது. இழுக்குகள் எதுவும் இல்லாமல் நாங்கள் இந்த சர்ச்சைகளில் இருந்து வெளியே வந்திருக்கிறோம். சுய நிதி மருத்துவக் கல்லூரிகள் பிரச்னையில், எங்களுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என மக்கள் உணர்ந்தனர். தொழில்துறை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ராஜினாமா செய்தது எங்கள் இமேஜை உயர்த்திக் காட்டியிருக்கிறது. கட்சியின் நெறிமுறைகளை அவர் மதிக்கிறார் என்பதை காண்பிப்பதற்காகவே பதவி விலகுவதாக கூறினார். முந்தைய அரசில், அமைச்சர்கள் அனைத்து விதமான புகார்களையும், விசாரணைகளையும் சந்தித்த போதும், ஒருத்தரும் பதவி விலகவில்லை.
கேள்வி: கன்னூர் வன்முறையில், சி.பி.எம். பதில் தாக்குதல் நடத்தி பாஜக-வுக்குச் சாதகமாக இயங்குவதாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
நான் விவரமாக பேசவில்லை. ஆனால், என் பிறப்பிடத்தில் எனக்கான வெற்றிப் பேரணி நடந்துக் கொண்டிருந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். எங்கள் ஆட்கள் ஒருவரை கொன்றபோது நாங்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. இதுபோல பல நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால், முக்கியமான கட்சி ஊழியர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்ஸால் கொல்லப்பட்டால், உள்ளூர் மக்கள் பதில் தாக்குதல் நடத்தலாம். பாஜக எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது என்பது உண்மை.
கேள்வி: உங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அரசின் செயல்பாடு குறித்து உங்களுடைய கருத்து என்ன? நீங்கள் முன்வைக்கும் வளர்ச்சித் திட்டம் என்ன?
ஏழை மக்களின் ஓய்வூதியத்தை அதிகரிப்போம் எனும் எங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தொடங்கினோம். வாழ்வின் அத்தனை நடைகளையும் தொட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு வடிவம் அளித்திருக்கிறோம். மூடப்பட்ட முந்திரி ஆலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்க கைத்தறி தான் உபயோகப்பட வேண்டும் என முடிவு செய்ததினால், கைத்தறித்துறைக்கு சந்தை கிடைத்திருக்கிறது. கட்டமப்பி பக்கத்தில், தேசிய நெடுஞ்சாலை முன்னேற்றம் கையில் எடுக்கப்படும். விமானப் போக்குவரத்து துறையில், கன்னூர் விமான நிலையப் பணி இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும்.
http://economictimes.indiatimes.com/opinion/interviews/et-qanda-rss-should-stop-violence-to-restore-peace-in-kannur-says-kerala-cm-pinarayi-vijayan/articleshow/55200755.cms
No comments:
Write comments