Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 4, 2016

ஜியோவிற்கு பயந்தா பிழைப்பு நடத்த முடியாது! - ஏர்டெல் திட்டவட்ட அறிவிப்பு


airtelநாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல், சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ஜியோ-விற்குப் பயந்து எல்லாம் சேவையின் கட்டணத்தைக் குறைக்க முடியாது என ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா பிரிவின் தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ குதித்துள்ளதால் சிறு நிறுவனங்களுக்கு அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும், நிறுவனங்கள் மத்தியிலான ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளது.

ஜியோவின் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை ஆணித்தனமாகக் கூறியுள்ளார் கோபால். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவு ஜியோவின் அறிமுகத்தால் சந்தையில் சேவை விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.

சொல்லப்போனால் ஜியோ அறிமுகக் காலத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் உயர்ந்துள்ளது, இந்த வளர்ச்சி அடுத்தக் காலாண்டிலும் எதிர்பார்க்கிறோம் என்று கோபால் விட்டல் கூறியுள்ளார்.

இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை என்றாலும் சரிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த காலாண்டில் நெட்வொர்க் மாற விரும்பும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.5-2.6 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே சந்தையில் தற்போது அதிகரித்துள்ள போட்டியை காட்டுகிறது.

இதை விரைவாக நிறுவனங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் இந்திய பிராந்தியத்தின் தலைவர் கோபால விட்டல் தெரிவித்தார். சமீபத்தில் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் தொடர்பை உறுதி செய்யும் பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன் வழங்காத காரணத்திற்காக ஏர்டெல் நிறுவனத்தின் மீது டெலிகாம் அமைப்பான டிராய் 1,050 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. பாயின்ட் ஆஃப் இண்டர்கனெக்ஷன் குறித்து ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்பிடம் விபரங்களை அளித்துத் தன் பக்கம் இருக்கும் நியாயமான கோரிக்கைகளைத் தெரிவித்து வருகிறது.

ஆனால் டிராய் மற்றும் டெலிகாம் அமைச்சகம் எதற்கும் செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜியோ நிறுவனத்தின் இலவச சேவைகள் முடியும் வரை நாங்கள் காத்திருக்கப் போகிறோம். இதன் பின்பே கட்டண குறைப்பு குறித்து ஆலோசனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்திய டெலிகாம் துறையில் கால் பதித்த நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் மவுசு குறையாத ஜியோ, தனது இலவச சலுகைகளை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியுடன் முழுமையாக நிறுந்த முடிவு செய்துள்ளது.

தனது சேவையை அறிவிப்பின் பின் சில நாட்களில் தனது இலவச சேவை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாகத் தெரிவித்தது ஜியோ. இந்திய டெலிகம் துறையின் சட்டதிட்டங்கள் படி எந்த ஒரு நிறுவனமானாலும் சரி வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் இலவச திட்டங்களை 90 நாட்களுக்கு அதிகமாக அளிக்கக் கூடாது. ஜியோ தனது சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. இதனால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் இலவச கால்கள், இலவச டேட்டா சேவைகள் என எதையும் பயன்படுத்த முடியாது. ஜியோவின் இலவச சேவைகள் முடிந்தால் இதன் உண்மையான நிலை தெரியும் என்பது ஏர்டெல் வாதம். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் ஜியோவின் அறிமுகத்திற்குப் பின் ஏர்டெல் மட்டும் அல்லாமல் ஐடியா, வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது சேவைக் கட்டணத்தை அதிகளவில் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் வெளியிட்ட ஜியோ ஏர்டெல் தொடர்புடை ஒரு கட்டுரையில் வாசகர் ஒரு, தான் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து விலக விரும்புவதாக ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகும்போது 1500 ரூபாயாக இருந்த அவரது மொபைல் பிளான்-ஐ கூடுதல் 3ஜி டேட்டா உடன் 1250 ரூபாயாகக் குறைத்தது எனத் தெரிவித்திருந்தார். தற்போது ஏர்டெல் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஜடியா, வோடபோன் ஆகிய அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள அதிகளவிலான சலுகையை அளித்து வருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic