கைகளில் இருக்கும் 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியதிலிருந்து இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் இச்சமயத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதும் அதிமுக மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண்டாண்டுகாலமாக ஒட்டுக்கு பணம் கொடுப்பது நடந்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க யாராலும் முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் நடந்ததாக கூறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. தற்போது அதன் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றனர். அதே சமயம் பணப்பட்டுவாடாவும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை இரு கட்சிகளுக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இரு கட்சியினரும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Write comments