Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

indian cricket squad

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவானுக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதுதான் அவரது முதல் சர்வதேச டெஸ்ட் ஆகும்.

2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் களமிறங்கிய கம்பீருக்கு மீண்டும் இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிக்குன் குனியா காய்ச்சலால் நியூசிலாந்து தொடரில் ஆட முடியாத இஷாந்த் ஷர்மாவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளி விஜய், செடேஷ்வர் புஜாரா, அஜிங்ய ரஹானே, கருண் நாயர், கவுதம் கம்பீர், விருதிமான் சகா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic