Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற காதல்...



ஒலிம்பிக்கில் போட்டிகளுக்கு இணையாக சுவாரஸ்யமான சம்பவங்களும் அவ்வப்போது நடக்கும். இதில் நேற்று நடந்த சம்பவம் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. சீனாவை சேர்ந்த ஒரு டைவர் சக நாட்டு வீராங்கனையிடம் காதலை சொல்ல அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
சீனாவை சேர்ந்த டைவர் He Zi (25) இவர் நேற்று நடந்த Women's 3m springboard ல் இரண்டாவது இடம் பிடித்தார். அவருக்கு பதக்கம் அளிக்கும்போது அந்த மேடைப் பகுதிக்கு சக நாட்டு டைவரான Qin Kai (30) வந்தார்.

இருவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர் வாழ்த்துக்களை கூற வந்திருப்பார் என அரங்கில் உள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால் அடுத்து அவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பதக்கம் அணிவிக்கும் மேடையிலையே அவர் He Zi முன் மண்டியிட்டு ஒரு மோதிரத்தை எடுத்து அவரிடம் நீட்டி, "என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" என்று கேட்டவுடன் அரங்கமே அவரை ஆச்சரியத்தோடு பார்த்தது.

இதற்கு He Zi என்ன பதில் கூறப் போகிறார் என்பதை அரங்கத்தில் உள்ளவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இதை பார்த்து முதலில் He Zi அதிர்ச்சியடைந்தாலும் பின்பு கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு அதை ஏற்றுகொண்டார்.

இதையடுத்து, தான் கொண்டு வந்த மோதிரத்தை Qin Kai அணிவித்தபோது, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது, சக வீராங்கனைகளும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து He Zi கூறுகையில், “நாங்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக பழகி வருகிறோம். ஆனால் இன்று அவர் இப்படி கேட்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேடையில் அவர் என்னிடத்தில் நிறைய விஷயங்களை கூறினார். அவரை நம்பி என்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்கலாம் என்று நம்பிக்கை இருந்ததால் அவரது வேண்டுகோளை ஏற்றுகொண்டேன்” என்றார்.

போட்டியில் பதக்கங்களை வென்றது மட்டுமில்லாமல் அதை விடவும் மேலான இதயத்தை வென்று விட்டது காதல்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic