அமெரிக்காவைச்சேர்ந்த ஹேலி என்ற இளம்பெண் தான் கருவுற்றிருப்பதாகவும், தனது வயிற்றில் வளர்வது இயேசு கடவுள் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தைச்சேர்ந்த இளம் பெண் ஹேலி, வயது 19. இவர் தான் கருவுற்றிருப்பதாக கூறிவருகிறார். ஆனால் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேலி கருவுற்றிருக்கவில்லை என்றும், அவளது வயிற்றில் எந்த குழந்தையும் வளரவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் தான் நிச்சயமாக கருவுற்றிருப்பதாக ஹேலி விடாப்பிடியாக கூறி வருகிறார். ஹேல் மேலும் கூறியதாவது " நான் கருவுற்றிருக்கிறேன். எனது வயிற்றில் இயேசுவே அவதரித்திருக்கிறார். எனது குடும்பம், நண்பர்கள், பாதிரியார்கள் என யாரும் இதனை நம்ப மறுக்கின்றனர். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. இயேசுவே உண்மையான தேவன் என்று நம்புபவர்களால் மட்டுமே நான் கருவுற்றிருப்பதை நம்புவார்கள். மருத்துவர்கள் என்ன சொன்னாலும் அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இயேசுவை பெற்றெடுக்கும்போது இவர்களால் மறுக்கவே முடியாது. இயேசுதான் என்னுடைய பாதுகாவலர்." என தெரிவித்தார்.
ஆனால் ஹேலியின் தாய் கிருஸ்டி கூறும்போது "ஹேலிக்கு மூளை குழம்பிவிட்டது. அவள் நிச்சயமாக ஏமாற்றம் தான் அடையப்போகிறாள் என தெரிவித்தார்.

No comments:
Write comments