பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் உலகிலேயே மிகமோசமான கணவர் என்று ஒருபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஐன்ஸ்டீனை பற்றி வால்டர் ஐசக்சன் என்பவர் “Einstein: His Life and Universe” என்ற நூலில் எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில், ஐன்ஸ்டீன் தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தியதைபற்றி தெரிவித்துள்ளார்.
11 ஆண்டு காலம் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கையில், ஐன்ஸ்டீனிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தியதோடு, அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மனைவி மாரிக்மிகச் சிறப்பாக பராமரித்ததோடு, அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டுவந்து கொடுத்தார்.
உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்து, படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறையும் ஐன்ஸ்டீன் செய்ததில்லை.
இந்நிலையில் தனது மனைவியிடம், அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச்செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக்கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது போன்ற பல நிபந்தனைகளை போட்டுள்ளார். இதையடுத்து 11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்கு பின்னர் தனது பிள்ளைகளையும்அழைத்து கொண்டு ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார்.

No comments:
Write comments