Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் - கேரள அரசு

 
sabarimalai temple
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. கோயிலில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளே தொடர வேண்டும் என்று தெரிவித்து வந்த கேரள அரசு தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதிலிருந்து 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு (மாதவிடாய் பருவத்தினர்) அனுமதியில்லை. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கேரளத்தில் ஆட்சியில் இருந்தபோது, கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை கோயிலில் வழக்கமாக பின்பற்றப்படும் விதிகளே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்தச் சூழலில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கேரளத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இடதுசாரி அரசு, முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே ஆதரித்தது வந்தது.
இந்நிலையில், தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த புதிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குப்தா வாதிட்டதாவது: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு எடுத்த முடிவையே தற்போதும் தொடர விரும்புகிறோம். சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க அரசு ஆதரவளிக்கிறது என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வேணுகோபால் வாதிடுகையில், "சபரிமலை விவகாரத்தைப் பொருத்தவரை கேரள அரசு, தனது விருப்பத்திற்கேற்ப முடிவுகளையும், நிலைப்பாட்டையும் அடிக்கடி மாற்றிக் கொள்வதை ஏற்க முடியாது' என்றார்.

இதன் பிறகு நீதிபதிகள் கூறுகையில், "கேரள அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே இந்த விவகாரத்தின் இறுதி முடிவாகக் கருத இயலாது; அனைத்து தரப்பினரின் கருத்துகளையும், அரசியல் சாசன விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கு தீர்வு காணப்படும்' என்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic