"தீவிரவாதம் ஆபத்து என்றாலும், பகவான் ஸ்ரீ அரவிந்தரைப் போன்ற தேசத்துக்காக கொள்கையில் உறுதியாக இருக்கின்ற தீவிரவாதம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்' என்று முன்னாள் காவல் துறை இயக்குநரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வுமான ஆர்.நடராஜ் கூறினார்.
சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அன்னை ஆசிரமத்தின் 8 -ஆம் ஆண்டு விழாவையொட்டி, நூல் நிலையத்தை திறந்து வைத்து அவர் மேலும் பேசியதாவது: பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியது. ஆனால், தீவிரவாதம் ஒரு வகையில் ஏற்கக் கூடியதாக இருக்கிறது. நல்ல கொள்கையின் அடிப்படையிலான தீவிரவாதம் வரவேற்ககூடியதே.
சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அன்னை ஆசிரமத்தின் 8 -ஆம் ஆண்டு விழாவையொட்டி, நூல் நிலையத்தை திறந்து வைத்து அவர் மேலும் பேசியதாவது: பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியது. ஆனால், தீவிரவாதம் ஒரு வகையில் ஏற்கக் கூடியதாக இருக்கிறது. நல்ல கொள்கையின் அடிப்படையிலான தீவிரவாதம் வரவேற்ககூடியதே.
வெளிநாட்டில் இருந்து வந்த மூன்று பெண்மணிகள் அன்னிபெசன்ட், நிவேதிதா, அரவிந்தர் அன்னை என அழைக்கப்பட மிர்ரா ஆகியோர் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள். பகவான் அரவிந்தர் பூரண யோகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அரவிந்தருக்கு அலிப்பூர் சிறையில் விவேகானந்தர் சூட்சுமமான ஆலோசனைகளை வழங்கி வந்ததை வரலாற்றில் காண்கிறோம்.
புதுச்சேரி வந்தநாள் முதல் அவர் மேற்கொண்ட பூரண யோகம் எதன் அடிப்படையில் என்றால், "நீயே இறைவன், அதாவது தெய்வம் நீயென்று உணர்' என்ற பாரதியின் வாக்கு என்பதுதான் அது. அரவிந்தர் தன் வாழ்நாள் முழுவதும் ஏராளமான நூல்களை எழுதி இருந்தாலும், சமாதி நிலையை அடையும் வரை எழுதிக் கொண்டிருந்த ஒரு மகா காவியம் சாவித்திரி. மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதைதான் சாவித்திரி என்றாலும், பகவான் அரவிந்தர் அதை நமக்கு ஆன்மிகக் கல்வி வடிவில் அளித்தது பெரும் கொடையாகும். சாவித்திரியைப் புரிந்து கொள்வது எளிதானது அல்ல என்றாலும் அதைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் சாவித்திரியைப் படிக்க வைக்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை மக்களைப் பாதுகாப்பது காவல் துறை அல்ல; ஆன்மிகம்தான். மருந்தீஸ்வரர், மயிலை கற்பகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடையம்மன், சாந்தோம் தேவாலயம் என ஏராளமான ஆலயங்களே மக்களுக்கு அரணாக இருக்கின்றன. தெய்வத்தின் கருணையே மக்களுக்குப் பாதுகாப்பு. ஆலயங்களுக்குச் சென்றால்தான் விமோசனம் பெற முடியும் என்றார் நடராஜ்.
முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி அன்னை அரவிந்தருக்கு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நடத்தப்பட்டது. முன்னதாக, மயிலாப்பூர் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 91 வகையான மலர்களைப் பார்வையிட்டு நடராஜ் பாராட்டினார்.
சேவை அன்பர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் ராணி மேரி கல்லூரியின் இசைத் துறை தலைவர் எம்.ஏ. பாகீரதி பரிசுகள் வழங்கிப் பேசினார். அன்னை ஆசிரமத் தலைவர் அன்னை அடிகள் வரவேற்றார். மயிலாப்பூர் ஆசிரமக் கிளையின் நிர்வாகி ஈஸ்வரி, திருமலை செல்வி ஆகியோர் நன்றி கூறினர்.
No comments:
Write comments