Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

சொராபுதீன் வழக்கு - அமித்ஷாவிற்கு எதிரான மனு மீண்டும் தள்ளுபடி!

 
plea against bjp leader amitsha rejected again
சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தலைவர் அமித் ஷாவை விடுவித்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

பயங்கர சமூக விரோதியாக இருந்த சொராபுதீன் என்பவர் தன் மனைவி கௌசர் பீயுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு ஹைதராபாதில் இருந்து மகாராஷ்டிரத்தின் சாங்க்லி நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரை குஜராத் போலீஸார் கடத்திச் சென்று, பின்னர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த என்கவுன்ட்டரை நேரில் பார்த்ததாகக் கூறப்பட்டவரும், சொராபுதீனின் உதவியாளருமான துளசிராம் பிரஜாபதியை குஜராத் போலீஸார் 2006ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றனர்.

சொராபுதீன் என்கவுன்ட்டர் தொடர்பாக குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும், போலீஸ் உயரதிகாரிகள் உள்பட காவல்துறையினர் சிலர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அமித் ஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சில மாத சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், வழக்கில் இருந்து அமித் ஷாவை கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி விடுவித்தது. இதை எதிர்த்து முன்னாள் அரசு அதிகாரியும், சமூக ஆர்வலருமான ஹர்ஷ் மந்தர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமித் ஷாவை இவ்வழக்கில் இருந்து விடுவித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் உறுதிப்படுத்தியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமித் ஷாவை விடுவித்து விசாரணை நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளை கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி உறுதிப்படுத்தியது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ஹர்ஷ் மந்தர், உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. "மறுஆய்வு மனுவையும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தத் தவறையும் நாங்கள் காணவில்லை' என்று நீதிபதிகள் தெரி
வித்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic