Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே பதவிகள் பறிக்கப்படும்! - தேர்தல் ஆணையம்


election commission of india

குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கு மத்திய தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையில், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வின்முன், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்குரைஞர் மீனாட்சி அரோரா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குற்றவியல் வழக்குகளில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பவர்கள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டால், அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் வரவேற்கிறது.

எனினும், அவ்வாறு பதவி நீக்கம் செய்வதற்கு தற்போதைய தேர்தல் சட்டப் பிரிவுகள் தடையாக உள்ளன.
ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரைப் பதவி நீக்கம் செய்வதாகவும், அவரது தொகுதி காலியாவதாகவும் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற அவை அல்லது மாநில சட்டப்பேரவையில் அதன் முதல்நிலைச் செயலர் அறிவிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதற்குப் பிறகுதான் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியும்.

அதுவரை, குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொடர்ந்து தனது பதவியை அனுபவிக்க தேர்தல் சட்டம் இடமளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கீழமை நீதிமன்றங்களில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அளிக்கப்படும் தீர்ப்பு, மேல்நிலை நீதிமன்றங்களால் நிறுத்தி வைக்கப்பட்டாலோ, ஒத்திவைக்கப்பட்டாலோ ஏற்படக்கூடிய சூழல் குறித்து நீதிமன்ற அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

இதற்கு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங் அளித்த விளக்கத்தில், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால் அது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சாதமாக அமையும் என்றும், தீர்ப்பு தள்ளிவைக்கப்படுவதால் அவர்களது பதவிப் பறிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக பதவியில் நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியும்கூட, அவர்களது பதவி நீக்கம் குறித்து நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ அறிவிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆவது குறித்தும், அதுவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி சுகம் அனுபவிப்பது குறித்தும் அதிருப்தி தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தனியார் தொண்டு நிறுவனமொன்று மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic