அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமையன்று காலை, மூன்று குறிப்பாணைகளில் கையெழுத்திட்டிருக்கிறார். டி.பி.பி. ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவிக்கும் குறிப்பாணை ஒன்று, மெக்சிகோ நகரத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் குறிப்பாணை ஒன்று மற்றும் அரசுக்காக ஊழியர்கள் பணியமர்த்துவதை நிறுத்தும் குறிப்பாணை ஒன்று என, மூன்று குறிப்பாணைகளில் ட்ரம்ப் நேற்று (23/01/2017) கையொப்பமிட்டிருக்கிறார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், கனடா, மெக்சிகோ உட்பட, பசிஃபிக்-ஆசியாவில் இருக்கும் 11 தேசங்களை பல வரிகள் மற்றும் விதிமுறைகளிலிருந்து விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வணிக ஒப்பந்தம்தான் டி.டி.பி. அமெரிக்கா இதிலிருந்து விலகியிருப்பதால் அமெரிக்க ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
மெக்சிகோ நகரத் திட்டம், 1984ஆம் ஆண்டு அதிபர் ரீகனால் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு சாரா அமைப்புகள், அரசிடமிருந்து நிதி உதவி பெற வேண்டும் என்றால், பிற நாடுகளில் கருக்கலைப்பு செய்வதை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாக விளம்பரப்படுத்தக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நிபந்தனை ஆகும். 1993ஆம் ஆண்டு பில் கிளிண்டன் பதவியேற்றபோது இதை ரத்து செய்தார். பின்னர், ஜார்ஜ் புஷ் அமல்படுத்தினார். 2009ஆம் ஆண்டு பராக் ஒபாமா மீண்டும் இதை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments