எகிப்தில் பழங்கால ஓவியங்கள், மம்மிகள், பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்படுவது அடிக்கடி நிகழும் ஒரு செயல் தான். அதன் வரிசையில் தற்போது 2000 ஆண்டுகள் பழமையான ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் சுமார் 1899இல் வரையப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்துள்ளனர். அதுபோல் இந்த ஓவியத்தை வரைந்தவர் எகிப்தை சேர்ந்த பழங்கால ஓவியர்களில் யாருமாக இருப்பார்களா என்ற நோக்கிலும் ஆராய்ந்து வருகின்றனர்.
மரத்தட்டுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஒரே முகத்தையே கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஓவியம் மம்மிக்களின் முகத்தை பிரதிபலிப்பது போல் இருக்கின்றது. ஆனால், பார்ப்பதற்கு ரோமன் கலாச்சாரத்தை ஒத்திருப்பதால், 2000 ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட தெளிவான ஓவியங்கள் எவ்வாறு வரையப்பட்டிருக்கும்? அதற்கு எதையெல்லாம் பயன்படுத்திருக்கிறார்கள் என்ற நோக்கிலும் ஆராய்ந்து வருகின்றனர். இதில் ஸ்பெயின், கிரேக் போன்ற பல்வேறு நாடுகளின் பிக்மேன்ட்களை ஒரு கலவையாக பயன்படுத்திருக்கின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Write comments