கடந்த 2016ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக பயணிகளை ஈர்த்த விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
இதுபற்றி துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 8.36 கோடி பேர் எங்களது விமான நிலையத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டில் ஈர்த்த பயணிகளைவிட இது 7.2 சதவிகித உயர்வாகும். கடந்த ஆண்டைவிட நடப்பு 2017ஆம் ஆண்டில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது, இந்த ஆண்டில் 8.9 கோடி பயணிகளை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளைதுபாய் ஆகிய விமானங்கள் 11 புதிய இடங்களுக்கு சேவை வழங்கவிருப்பதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேபோல, இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமானங்களும் எங்களது விமான நிலையத்துக்கு புதிய விமானப் பயணத்தை தொடங்கவிருக்கின்றன. நேபாள் ஏர்வேஸ் மற்றும் ரஷ்யா ரோஷிய்யா ஏர்வேஸ் விமானங்களும் எங்களது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய சேவை வழங்கவிருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தைத் தொடர்ந்து அதிக பயணிகளை ஈர்த்த விமான நிலையமாக லண்டனைச் சேர்ந்த ஹீத்ரோ விமான நிலையம் 7.6 கோடி கோடிப் பயணிகளை ஈர்த்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
No comments:
Write comments